| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 200206b ii 000 0 tam d |
| 245 | : | _ _ |a ஆலிங்கனமூர்த்தி |
| 300 | : | _ _ |a சைவம் |
| 340 | : | _ _ |a கருங்கல் |
| 500 | : | _ _ |a சிவபெருமானும் உமையும் நின்ற நிலையில் உள்ளனர். அண்ணல் அன்னையை இடது கையால் தோளில் அணைத்தவாறு உள்ளார். முகம் அமைதி தவழும் பாணியில் புன்னகைத்தவாறு காட்டப்பட்டுள்ளது. தேவி தலைவனின் ஆலிங்கனத்தில் நாணமடைந்த முகத்தினளாய் காட்டப்பட்டுள்ளார். இறைவன் நாலிரு புயத்தோடும், இறைவி இரு கரங்களோடும் உள்ளனர். கடவுளின் மேற்கரங்களில் மான் மழு காட்டப்பட்டுள்ளது. வலது முன்கை கடி முத்திரை காட்டியபடி இடையில் அமைந்துள்ளது. இடது முன் கை துணையின் தோளைத் தழுவியுள்ளது. தேவி வலது கையில் மலரைப் பிடித்தும், இடதுகையை தொங்கவிட்டவாறும் உள்ளாள்.எளிமையான ஆடையணிகள் காட்டப்பட்டுள்ளன. இருவரின் தலையலங்காரம் சிறப்பானது. காதணிகளும் கழுத்தணிகளும் குறிப்பிடத்தக்கவை. |
| 510 | : | _ _ |a ஆசனபதம் (சிற்பநூல்), உக்கிரபீடம் (சிற்பநூல்), உபபீடகம் (சிற்பநூல்), தண்டிலம் (சிற்பநூல்), பரமசாயிகம் (சிற்பநூல்), மகாபீடபதம் (சிற்பநூல்), மண்டூகம் (சிற்பநூல்), மயமதம், மானசாரம், வாசுத்து சூத்திர உபநிடதம், ஸ்ரீதத்வநிதி, அனுபோக பிரசன்ன ஆரூடம், அருட் கொடி சிற்பசாஸ்திரக் கண்ணாடி, காக்கையர் சிற்பம் புசண்டர் சல்லியம், சர்வார்த்த சிற்ப சிந்தாமணி, சிற்பச் செந்நூல், வை. கணபதி ஸ்தபதி, மாமல்லபுரம் கலைக் கல்லூரி, மாமல்லபுரம், T. A. Gopinatha Rao, Elements of Hindu iconography, Motilal Banarsidass Publisher, 1993 . |
| 520 | : | _ _ |a திருச்சி மாவட்டம் லால்குடி வட்டத்தைச் சேர்ந்த கோபுரப்பட்டி என்னும் ஊரில் உள்ள பாச்சில் அவனீச்சுவரமுடையார் கோயில் முதலாம் பராந்தகச் சோழனால் எடுப்பிக்கப்பட்ட கற்றளியாகும். இச்சிவன் கோயிலில் பல அரிய சிற்பங்கள் முற்காலச் சோழர் கலைப்பாணியில் அமைக்கப்பட்டிருந்தன. இக்கோயில் சிதிலமடைந்திருந்த நிலையில் இங்குள்ள சிற்பங்கள் தஞ்சாவூர் இராஜராஜன் அகழ் வைப்பகத்தில் வைத்து பாதுகாக்கப்பட்டுள்ளது. இச்சிற்பம் சிவவடிவங்களுள் ஒன்றான ஆலிங்கனமூர்த்தி ஆகும். |
| 653 | : | _ _ |a இராஜராஜன் அகழ் வைப்பகம், அருங்காட்சியகம், தஞ்சாவூர், இராஜராஜன் மணிமண்டபம், சிற்பங்கள், உமாசகிதர், உமாமகேசுவர்ர், அணைந்தபிரான், ஆலிங்கனமூர்த்தி, பராந்தக சோழன், முற்காலச் சோழர், கலைப்பாணி |
| 700 | : | _ _ |a மதுரை கோ.சசிகலா |
| 710 | : | _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| 752 | : | _ _ |a இராஜராஜன் அகழ் வைப்பகம் |b கோபுரப்பட்டி பாச்சில் அவனீசுவரர் கோயில், திருச்சி. |c தஞ்சாவூர் |d தஞ்சாவூர் |f தஞ்சாவூர் |
| 905 | : | _ _ |a கி.பி.9-10-ஆம் நூற்றாண்டு/முதலாம் பராந்தக சோழன் |
| 914 | : | _ _ |a 10.77026327 |
| 915 | : | _ _ |a 79.13089514 |
| 995 | : | _ _ |a TVA_SCL_001333 |
| barcode | : | TVA_SCL_001333 |
| book category | : | கற்சிற்பங்கள் |
| cover | : |
|
| Primary File | : |